Voter ID online apply in Tamil | How To apply Voter ID card Voters Helpline | JK TECH

JK TECH - ஜெகெ டெக்
0
எல்லாருக்கும் வணக்கம் நண்பா!


இந்த பதிவில் நாம் வாக்காளர் அடையாள அட்டை ஆன்லைனில் அப்ளை செய்து எப்படி பெறுவது என்பதை பற்றி தான் பார்க்க இருக்கிறோம். இந்த பதிவை முழுமையாக படியுங்கள் பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

வாக்காளர் அடையாள அட்டை:
இந்த பூமியில் குடிமகனாக பிறந்தால் அவர்களுக்கு என்று தனியாக வாக்காளர் அடையாள அட்டை என்று கொடுக்கப்படுகிறது. வாக்காளர் அடையாள அட்டை ஒவ்வொரு நபருக்கும் இன்றியமையாதது ஆகும். 18 வயதிற்கு மேற்ப்பட்ட அனைவரும் பதிவு செய்து பெறவேண்டும் என்பதே JK TECH-ன் நோக்கம் ஆகும். இந்த வாக்காளர் அடையாள அட்டை இருந்தால் உங்கள் ஓட்டுகளின் மூலம் ஒருவரை அரியணையில் அமர வைக்கவும் முடியும் அதே அரியணையில் இருந்து கீழே இருக்கவும் முடியும்.

வாக்காளர் அட்டை பெறுவது எப்படி:
VOTERS HELPLINE என்ற APPLICATION மூலம் வீட்டில் இருந்தபடியே ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் பெறலாம். இந்த செயலி PLAY STORE-ல் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். உங்கள் சுய விவரங்களை உள்ளீடு செய்து இந்த செயலியினுள் உள்நுழையுங்கள். இப்போது, புதிதாக பெற வேண்டும் என்றால் அதற்கு என்று தனியாக இருக்கும் OPTION-ஐ கிளிக் செய்து உங்கள் ஊர் மற்றும் வாக்களிக்கும் இடம் எது என்பதை SELECT செய்து கொள்ளுங்கள். அனைத்து விவரங்களையும் தவறில்லாமல் பதிவு செய்த பிறகு உங்கள் பெயர் மற்றும் அடையாள ஆவணங்களை அப்லோட் செய்த பிறகு NEXT என்ற OPTION-ஐ கிளிக் செய்த பிறகு உங்களுக்கு என்று ஒரு REFERRENCE ID கொடுக்கப்படும். இந்த REF ID மூலம் உங்கள் அடையாள அட்டை இப்போது எந்த நிலையில் உள்ளது என்பதை அறிந்து கொள்ளமுடியும்.

வாக்காளர் அட்டை எப்போது பெறலாம்:
உங்கள் ஆவணங்கள் மற்றும் விவரங்களை சரி பார்த்த பிறகு உங்களுக்கு வாக்காளர் எண் தருவார்கள். அடையாள அட்டை நீங்கள் இருக்கும் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு அனுப்பி வைப்பார்கள். இதற்கு என்று ஒரு ரூபாய் கூட நீங்கள் செலவு செய்ய தேவையில்லை. எப்படி அப்ளை செய்ய வேண்டும் என்பதற்கான YOUTUBE வீடியோ லிங்கும் கொடுக்கப்பட்டுள்ளது. தயவுசெய்து அனைத்து விவரங்களையும் சரியாக பதிவேற்றம் செய்யுங்கள்.

கம்ப்யூட்டர் சென்டர்:
வாக்காளர் அட்டை வாங்க கணினி மையத்திற்கு சென்றால் அவர்கள் அட்டை பெற்று தர உங்களிடம் ₹100 முதல் ₹200 வரை பெறுவார்கள். இலவசமாக பெற வேண்டிய அட்டைக்கு பணம் செலவு செய்ய வேண்டுமா. வீடியோ பார்த்து நீங்களே இலவசமாக அப்ளை செய்து அட்டையை பெறுங்கள்.

YOUTUBE VIDEO LINK : CLICK HERE

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துகளை கீழே உள்ள பெட்டகத்தில் பதிவு செய்யுங்கள் அடுத்து பார்க்கும் நண்பர்களுக்கு உதவியாக இருக்கும்.

நன்றி!

Post a Comment

0Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !