Mobile Important Settings In Android | 5 Important Settings To Turn On , Off In Android Mobile | JK Tech

JK TECH - ஜெகெ டெக்
0
எல்லாருக்கும் வணக்கம் நண்பர்களே!


இந்த பதிவில் நாம் பார்க்க இருப்பது "நம் செல்போனில் மாற்றக்கூடிய சில செட்டிங்ஸ்களை பற்றி தான் பார்க்க இருக்கிறோம்" இந்த செட்டிங்ஸ் மூலம் உங்கள் செல்போனை தீயவர்களிடம் இருந்து பாதுகாத்து வைத்து கொள்ளமுடியும். இந்த பதிவை முழுமையாக படியுங்கள் நண்பர்களே. உங்களுக்கு இந்த பதிவு பிடித்து இருந்தால் உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

Mobile Settings:
நம் பயன்படுத்தும் மொபைலில் சில செட்டிங்ஸ் தானியங்கி (Automatic) முறையில் ON செய்யப்பட்டிருக்கும், அப்படி ON செய்யப்பட்டிருக்கும் செட்டிங்ஸ்களில் சில நம் செல்போனை வேவு பார்க்கவும் கூடும். அதனால், கீழே சொல்லப்பட்டிருக்கும் வழிமுறைகளை பின்பற்றி உங்கள் செல்போன் மற்றும் சுய தகவல்களை நன்முறையில் பாதுகாத்து வைத்து கொள்ளுங்கள். குறிப்பாக உங்கள் பேங்க் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளின் தகவல்கள் திருடுப்போகமல் இருக்க தயவுசெய்து சில செட்டிங்ஸ்களை ஆஃப் செய்வது நல்லது. இன்டர்நெட்டில் வலம் வரும் சில கருப்பு ஆடுகள் இது போன்ற மோசமான செயல்களை செய்து வருகிறார்கள்.

மூன்றாம் தரப்பு செயலிகள்:
Play Store மற்றும் App Store - ல் அங்கீகாரம் பெறாத சில செயலிகள் உள்ளன. இவை பெரும்பாலும் மக்களை ஏமாற்றுவதற்கு தான். நீங்கள் உங்கள் செல்போனில் மூன்றாம் தரப்பு செயலிகளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொண்டு இருந்தால் தயவுசெய்து அதுபோன்ற செயலிகளை பயன்படுத்த வேண்டாம். இதுபோன்ற கருப்பு ஆடுகளின் செயலிகளின் மூலம் உங்கள் தகவல்கள் திருடுபோகலம் அதனால், UNISTALL செய்துவிடுங்கள்.

எவ்வாறு தகவல்கள் திருடுப்போகிறது:
நீங்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் சில மூன்றாம் தரப்பு செயலிகள் உங்கள் செல்போனில் INSTALL செய்வதற்கு முன்பு சில அனுமதியை கேட்பார்கள் அதை படித்து பார்க்காமல் ON செய்வது தான் முதல் தவறு. பாதுகாப்பற்ற இணைய தளங்களில் உங்கள் ஈமெயில் மற்றும் சுய தகவல்களை தெரிவிப்பதன் மூலமும் தகவல்களை திருடுகிறார்கள்.

ஆஃப் செய்ய வேண்டியவை:
உங்கள் Chrome Browser - ல் உள்ள செட்டிங்ஸ் என்ற Option-ஐ கிளிக் செய்து அதில் சில Permission-களை ஆஃப் செய்து வைப்பது மிக சிறந்தது. கேமரா-வின் Permission-ஐ ஆஃப் செய்து வைப்பது ரொம்பவே நல்லது. Cookies செட்டிங்ஸ்-ல் மூன்றாம் தரப்பு குக்கிகளை ஆஃப் செய்து வையுங்கள் மற்றும் இது போன்ற இன்னும் தேவையில்லாத சில Permission-களை ஆஃப் செய்து விடுவது நல்லது. இந்த மாற்றம் மூலம் உங்கள் செல்போன் பாதுகாப்பான முறையில் இருக்கும். இன்னோரு தகவல் தேவையில்லாத தளங்களுக்கு உங்களின் நுழைவை பதிவு செய்யாதீர்கள்.

ON செய்ய வேண்டியவை:
PlayStore-ல் உள்ள ஒரு செட்டிங்ஸ் ON செய்வதன் மூலம் உங்கள் செல்போனின் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தி கொள்ளமுடியும். PLAYSTORE-ஐ ஓபன் செய்து அதில் Play Protect-ல் உள்ள செட்டிங்ஸ்களை ON செய்து வைக்கவும் மற்றும் ஒரு வாரத்திற்கு ஒரு முறையாவது செல்போனை ஸ்கேன் செய்வது ரொம்பவே நல்லது. அதனால், உங்கள் செல்போனில் உள்ள தேவையில்லாத செயலிகளை ஸ்கேன் செய்து பாதுகாப்பை அதிகரிக்க முடியும்.

YOUTUBE VIDEO LINK : CLICK HERE

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துகளை கீழே உள்ள பெட்டகத்தில் பதிவு செய்யுங்கள் அடுத்து பார்க்கும் நண்பர்களுக்கு உதவியாக இருக்கும்.
Tags

Post a Comment

0Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !