Jio 5G service in India | ஜியோவின் 5ஜி தொழில்நுட்பம் இந்தியாவில் 2021-ல் உதயமாகிறது | JK TECH

JK TECH - ஜெகெ டெக்
0

 எல்லாருக்கும் வணக்கம் நண்பா!


இந்த பதிவில் நாம் பார்க்க இருப்பது "இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ 2021-ம் ஆண்டின் 2ஆம் பாதியில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தருக்கிறது". தயவுசெய்து இந்த பதிவை முழுமையாக படியுங்கள், பிடித்திருந்தால் உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு இந்த பதிவை பகிருங்கள்.

ஜியோ நிறுவனம்:
இந்நிறுவனம் 2007-ல் ஜியோ என்று அறிமுகமானது. முதலில் தம் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக DATA மற்றும் ஆடியோ கால் வசதி போன்ற இலவசங்களை சில ஆண்டுகளுக்கு கொடுத்து வந்தது. அதன் பின்னர், பணம் கொடுத்து RECHARGE செய்தால் மட்டுமே தொடர்ந்து சேவையை பெற முடியும் என்று ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை தந்தது. இருந்தாலும், மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களை காட்டிலும் ஜியோ நிறுவனம் குறைந்த பணத்தில் அனைத்து சேவைகளையும் வழங்குகிறது. அதனால், தான் இந்நிறுவனம் குறுகிய காலத்தில் அதிக பயனர்களை தன் வசம் ஈர்த்தது. இதுமட்டுமின்றி, ஜியோ நிறுவனத்துடன், கூகிள் போன்ற பெரிய பெரிய நிறுவனங்கள் தங்கள் கூட்டணியை வைத்தது.

அதிவேக பைபர் வசதி:
இந்தியாவில் ஒருசில பகுதிகளில் இன்டர்நெட் வசதியே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், ஜியோவின் 5ஜி சேவைக்கு பிறகு 3 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் அதிவேக பைபர் (இன்டர்நெட்) வசதி அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டு சேர்க்கப்படும் என்று India Mobile Congress கூட்டத்தில் அம்பானி தெரிவித்தார். ஜியோவின் 5ஜி வளர்ச்சி இந்தியாவில் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இடையில் ஒரு புரட்சி என்று தான் கூற வேண்டும். 

குறைந்த கட்டணம்:
இந்தியா மொபைல் காங்கிரஸ் கூட்டத்தில் பிரதமர் "உலகில் மிக குறைந்தக் கட்டணத்தில் மொபைல் சேவையை வழங்கும் இந்தியாவும் வேகமாக வளர்ந்து வரும் பயன்பாட்டு சந்தைகளில் ஒன்று தான் என்று வலியுறுத்தினார்". இதை, மையமாக வைத்ததுதான் குறைந்த கட்டணத்தில் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி வழங்கப்படும் என்று ஜியோ நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.

எப்போது 5G சேவை:
நேற்று நடந்த கூட்டத்தில் ஜியோ நிறுவன தலைவர் 2021ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் ஜியோ நிறுவனத்தின் 5G சேவை ஆரம்பிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
5G சேவையை இந்தியாவிற்கு ஜியோ தான் முதன் முதலில் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பதிவை முழுமையாக படித்த நண்பர்களுக்கு ரொம்பவே நன்றிகள். இந்த பதிவு பிடித்து இருந்தால் கீழே உள்ள கமெண்ட் பெட்டகத்தில் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும், உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இந்த பதிவை பகிரவும்.

நன்றி!
Tags

Post a Comment

0Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !