JIO MEDIATEK Free fire Gaming Masters Tournament 2021 | JK Tech Tamilan

JK TECH - ஜெகெ டெக்
0
எல்லாருக்கும் வணக்கம் நண்பா!


இந்த பதிவில் நாம் பார்க்க இருப்பது Jio மற்றும் Mediatek நிறுவனங்கள் இணைந்து இந்தியாவில் போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளது. இதைப்பற்றி முழுமையாக இந்த பதிவில் பார்க்கலாம். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இந்த பதிவை பகிருங்கள்.

Jio Games:
Jio என்றாலே அனைவருக்கும் நியாபகம் வருவது Mukesh Ambani தான், இவர் இந்தியாவில் தன் பயனர்களுக்கு எண்ணற்ற சேவையை வழங்கி வருகிறார். தற்போது, Jio Games மூலம் இந்தியாவில் Tournament நடத்த திட்டமிட்டுள்ளார்கள். இதன்மூலம் 12.5 லட்சம் மதிப்பிலான பரிசுகளை வெல்லலாம் என்றும் கூறியுள்ளார்கள். கூடிய விரைவில் Jio நிறுவனம் 5G சேவையை அறிமுகப்படுத்த உள்ள நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டு Game விளையாடுபவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார்.

MediaTek:
MediaTek என்பது வெறும் வார்த்தை அல்ல தற்போது செல்போனில் உள்ள Processor தயாரிக்கும் நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. ஆனால், எனக்கு இந்த MediaTek processor பிடிக்காது. விரைவில் இந்நிறுவனமும் சிறந்த Processor வெளியிடும் என்று நம்பலாம். இந்நிறுவனமும் Jio நிறுவனமும் இணைந்து தான் இந்த போட்டிகளை நடத்த உள்ளனர். இதன் மூலம், தங்கள் நிறுவனத்திற்கு பயனர்கள் அதிகம் கிடைப்பார்கள் என்று அவர்கள் இந்த போட்டிகளை நடத்தலாம்.

Jio MediaTek Tournament Register:
இந்த போட்டிகளை விளையாட எந்த நிபந்தனை பின்பற்ற வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம்.

முதலில் இந்த Tournament ல் கலந்து கொள்ள எந்த தொகையும் செலுத்த தேவையில்லை என்று கூறுகிறார்கள்.

ஜியோ பயனர்கள் மற்றும் ஜியோ அல்லாத பயனர்கள் எல்லோரும் இந்த போட்டிகளில் கலந்துகொள்ளலாம்.

இதன்மூலம், அனைத்து வகையான போட்டியாளர்களும் கலந்து கொள்ளலாம் என்று தெரிகிறது. அதேபோல், நீங்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றால் அதற்கு வெற்றி தொகையாக ₹2.5 லட்சம் வழங்கப்படுகிறது. அனைவரும் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும் என்று உங்களை கேட்டு கொள்கிறோம்.

இந்த போட்டிகள் மொத்தம் 70வது நாட்கள் நடக்கும். அதற்கான முன்பதிவு இன்று  (30/12/2020) தொடங்கப்பட்டுள்ளது ஜனவரி 9ம் தேதி முன்பதிவு முடிய உள்ளது. போட்டிகள் ஜனவரி 13ம் தேதி தொடங்கி மார்ச் மாதம் 7ம் தேதி வரை நடக்கும். 

ஜியோ கேம்ஸ் நடத்தும் இந்த போட்டியில் ஜியோ அல்லாத பயனர்களும் பங்கேற்கலாம் என கூறப்படுகிறது. அதேபோல் இந்த முழு டோர்னமென்டும் ஜியோடிவியின் எச்டி எஸ்போட்ஸ் மற்றும் யூடியூப்பில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என ஜியோ தரப்பில் கூறப்படுகிறது. அதேபோல், முழு போட்டிகளும் ஜியோவின் HD Esports மற்றும் Youtube சேனல்களில் Live செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்கள்.

இந்த பதிவு முழுமையாக படித்த நண்பர்களுக்கு நன்றிகள். இப்பதிவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள். உங்கள் கருத்துக்களை கீழே உள்ள Comment பெட்டியில் கூறுங்கள். போட்டியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

நன்றி!
Tags

Post a Comment

0Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !